தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/எதிர்கால தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறன் இந்தியாவுக்கு வேண்டும்: பிரதமர் மோடி

எதிர்கால தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறன் இந்தியாவுக்கு வேண்டும்: பிரதமர் மோடி

எதிர்கால தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறன் இந்தியாவுக்கு வேண்டும்: பிரதமர் மோடி

7


ADDED : நவ 04, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

7

ADDED : நவ 04, 2026 07:44 PM


7
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது டில்லி நிருபர்-

லித்தியம் மற்றும் நிக்கல் போன்ற முக்கியமான கனிமங்களை சுத்திகரிக்கும் பணிகளை ஊக்குவிக்க ரூ.2,814 கோடி மதிப்பிலான ஐந்தாண்டு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

நமது எதிர்காலத்துக்கு ஆற்றல்அளிக்கும் முக்கிய கனிமங்களை சுத்தப்படுத்த வெளிநாடுகளை இந்தியா சார்ந்திருக்க வேண்டும் என நினைக்கின்றீர்களா? நான் அப்படி நினைக்கவில்லை.?லித்தியம், நிக்கல், கோபால்ட் .. இவை மின்வாகனங்கள், மின்கலங்கள்,மின்னணுவியல் மற்றும் பாதுகாப்புக்கு அத்தியாவசியமானவை. இருப்பினும் சுத்திகரிக்கப்பட்ட கனிமங்களின் இறக்குமதியை நாம் பெருமளவில் சார்ந்திருக்கிறோம். இதை சரி செய்ய, நிலைமையை மாற்றுவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.



அதன் முக்கிய அம்சங்கள்:

முக்கிய கனிமங்கள் த்திகரிப்பு ஆலைகள்

முதலீட்டை ஆதரிப்பதற்கான மூலதன மானியம்

வலுவான விநியோக சங்கிலிகள்.

கொள்கைகள் தெளிவாக உள்ளன. எதிர்கால தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறன் இந்தியாவிடம் இருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும், '' 2026- 2031 வரையிலான காலத்தில் புள்ளியியல் மாற்றம், பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான வளர்ந்த பாரதத்திற்கான முன்மாதிரி '' திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.





இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: சிறந்த தரவு என்பது சிறந்த முடிவுகள், சிறந்த கொள்கைகள் மற்றும் மக்களுக்கு சிறந்த முடிவு அளித்தல். இந்தியாவின் புள்ளிவிவர முறையை மாற்றுவதற்கான விஸ்டார் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us