sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் சீன துருப்புக்களை அனுமதிக்க மாட்டோம்: அந்தோணி

/

காஷ்மீரில் சீன துருப்புக்களை அனுமதிக்க மாட்டோம்: அந்தோணி

காஷ்மீரில் சீன துருப்புக்களை அனுமதிக்க மாட்டோம்: அந்தோணி

காஷ்மீரில் சீன துருப்புக்களை அனுமதிக்க மாட்டோம்: அந்தோணி


UPDATED : அக் 12, 2011 05:42 PM

ADDED : அக் 12, 2011 04:05 PM

Google News

UPDATED : அக் 12, 2011 05:42 PM ADDED : அக் 12, 2011 04:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீன துருப்புக்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும், அவ்வாறு முகாமிட்டால் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் எல்லைப்பகுதியில் உள்ள ஜம்மு-காஷ்மீரின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன துருப்புக்கள் முகாமிட்டுள்ளதாக கடந்த 6-ம் தேதி இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் விகே.சிங் கூறியுள்ளார்.



இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: சீனாவில், சீன மக்கள் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ) என்ற பெயரில் அந்நாட்டு துருப்புகள், இந்தியாவின் எல்லைப்பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அத்துமீறி முகாமிட்டுள்ளனர். ஏறத்தாழ 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் துருப்புக்கள் அங்கு முகாமிட்டு, ராணுவ நிலைகளை அமைப்பதற்கான கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.



முன்னதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனதுருப்புக்களின் நடவடிக்கை அச்சுறுத்தலாக உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய கடற்படை உயரதிகாரிகளின் கூட்டம் டில்லியில் நடந்தது.



இதில் கலந்து கொண்டு மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி பேசியதாவது: தற்போது நமது நாட்டின் கடல் பாதுகாப்பினை வலுப்படுத்துவதிலும், மேம்படுத்துவதிலும் நமது சொந்த ராணுவப்படைகளே திறமையாக கவனித்து வருகின்றன. இருந்த போதிலும் நமது கடல் எல்லையின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியம் தரப்படும். எனினும் வியாட்நாம்- சீன கடல் எல்லையின் தெற்கு பகுதியில் இந்தியா கச்சா எண்ணெய் எடுத்துவருவதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது இந்தியா வந்துள்ள வியட்நாம் அதிபர் ‌துரோங்-தாங் செங், பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேச உள்ளார்.



பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் (‌பி.எல்.ஏ.) படையினர் 4 ஆயிரம் பேர் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது. இது தொடர்பாக இந்தியா சார்பில் ‌‌எங்களது எதிர்ப்பினை சீனாவிடம் எடுத்துச் சொல்வோம். எனினும் சீன துருப்புக்கள் இந்தியாவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கட்டுமானப்பணிகள் எதையும் மேற்கொள்ள விடமாட்டோம். இதில் இந்தியா தொடர்ந்து கண்காணித்து எதிர்ப்பு தெரிவிக்கும் என கூறினார்.








      Dinamalar
      Follow us