ADDED : மே 26, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மத்திய அரசுக்கு பொருளாதார வளர்ச்சி குறித்த ஆலோசனைகளை வழங்கும், 'நிடி ஆயோக்' அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்பிரமணியம் கூறியதாவது:
சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய புள்ளி விபரப்படி, உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது.
அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. இதுவரை நான்காவது இடத்தில் இருந்த ஜப்பானை முந்தியுள்ளது.
தற்போதுள்ள நம் பொருளாதார வளர்ச்சி நிலை தொடர்ந்தால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மூன்றாவது இடத்துக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.