காசாவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு அதிர்ச்சி அளிக்கிறது: இந்தியா வருத்தம்
காசாவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு அதிர்ச்சி அளிக்கிறது: இந்தியா வருத்தம்
ADDED : ஆக 27, 2025 12:01 PM

புதுடில்லி: காசாவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு அதிர்ச்சி அளிக்கிறது என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் போர் துவங்கியது. காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், காசாவின் முக்கிய மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
காசாவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது மற்றும் மிகவும் வருந்தத்தக்கது. மோதலில் பொதுமக்கள் உயிரிழப்புகளை இந்தியா எப்போதும் கண்டித்து வருகிறது.
இஸ்ரேலிய அதிகாரிகள் ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ளனர் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.