தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/நாட்டின் முதல் பன்நோக்கு போர்க்கப்பல் ஐ.என்.எஸ்., சமர்தக் கடற்படையில் இணைப்பு

நாட்டின் முதல் பன்நோக்கு போர்க்கப்பல் ஐ.என்.எஸ்., சமர்தக் கடற்படையில் இணைப்பு

நாட்டின் முதல் பன்நோக்கு போர்க்கப்பல் ஐ.என்.எஸ்., சமர்தக் கடற்படையில் இணைப்பு


ADDED : அக் 16, 2026 10:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2026 10:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

– சிறப்பு நிருபர் –

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் பன்நோக்கு போர்க்கப்பலான, ‘ஐ.என்.எஸ்., சமர்தக்’, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கடற்படையில் நேற்று முறைப்படி இணைக்கப்பட்டது.

நம் கடற்படையில், நான்கு பன்நோக்கு போர்க்கப்பல்களை இணைக்க திட்டமிட்ட ராணுவ அமைச்சகம், முதலாவதாக 887 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு கப்பல்களை வடிவமைத்து வழங்க, ‘எல் அண்ட் டி’ நிறுவனத்துடன் 2022ல் ஒப்பந்தம் போட்டது. பிரதமர் நரேந்திர மோடியின், ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘சுயசார்பு இந்தியா’ திட்டங்களின் கீழ், சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் இதற்கான பணிகள் நடந்து வந்தன.

முதலில் தயாரான நாட்டின் முதல் பன்நோக்கு அதிநவீன போர்க்கப்பலான ஐ.என்.எஸ்., சமர்தக், கடற்படையிடம் சமீபத்தில்ஒப்படைக்கப்பட்டது. இந்த கப்பல், கர்நாடகாவின் கார்வாரில் உள்ள கடற்படை தளத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முறைப்படி கடற்படையில் இணைக்கப்பட்டது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், கடற்படை தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் ஐ.என்.எஸ்., சமர்தக் கப்பலை முறைப்படி கடற்படையில் இணைத்தார்.

நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில்,“ராணுவ தளவாடங்களை, உள்நாட்டிலேயே தயாரிப்பதில், நம் நாடு தன்னிறைவு பெறுவதற்கான முயற்சியில், இது முக்கிய மைல்கல். 75 சதவீதத்துக்கும் அதிகமான உள்நாட்டுப் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள ஐ.என்.எஸ்., சமர்தக், நம் நாட்டின் தொழில்துறை, தொழில்நுட்பம் மற்றும் கப்பல் கட்டுமானத் திறன்களின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. இதன்மூலம், ராணுவ துறையில், நம் நாடு அடைந்துள்ள தற்சார்பு, உலகிற்கே பறைசாற்றப்பட்டுள்ளது,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us