மியான்மருக்கு 15 டன் நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா
மியான்மருக்கு 15 டன் நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா
ADDED : மார் 29, 2025 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: கடும் நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மியான்மருக்கு, அவசர உதவியாக, 15 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி உள்ளது.
உ.பி., மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் இருந்து, இந்த நிவாரண பொருட்களை ஏற்றிக் கொண்டு ராணுவ விமானம் சென்றுள்ளது. கூடாரம், படுக்கை விரிப்புகள், போர்வைகள், உணவு பொருட்கள், நீர் ஆகாரங்கள், சோலார் விளக்குகள், மருந்துகள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் இந்தியா சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.
கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் இதுவரை 150 வரை பலியாகி இருப்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.