இந்தியா விழித்துக் கொண்டால் உலகின் தலைசிறந்த பொருளாதார நாடாக மாறும்; சந்திரபாபு நாயுடு புகழாரம்
இந்தியா விழித்துக் கொண்டால் உலகின் தலைசிறந்த பொருளாதார நாடாக மாறும்; சந்திரபாபு நாயுடு புகழாரம்
ADDED : ஜன 20, 2026 05:02 PM

டாவோஸ்: இந்தியா தூங்கி கொண்டு இருக்கும் ஒரு பேராற்றல் கொண்ட நாடு. அது விழித்துக் கொண்டால் உலகின் தலைசிறந்த பொருளாதார நாடாக மாறும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரத்தில் 56வது உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில் கூறியதாவது;
இந்தியா ஏற்கனவே உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. இன்னும் 2-3 ஆண்டுகளில் பெரிய பொருளாதார நாடாகவும், 2048ம் ஆண்டுக்குள் 2வது இடத்திலும் இருக்கும்.
நாம் இங்கே ராட்சதர்களுடன்(பொருளாதார வல்லமைமிக்க நாடுகளை குறிப்பிடுகிறார்) சண்டையிடுகிறோம். இந்தியா ஒரு உறங்கும் பேராற்றல் கொண்ட நாடு. அது விழித்துக் கொண்டால் உலகின் தலைசிறந்த பொருளாதார நாடாக மாறும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
இதே மாநாட்டில் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பிரதமர் மோடி அரசின் நடவடிக்கைகள், கொள்கைகளால் மாநிலம் பெரிதும் பயன் அடைந்து வருகிறது. நாட்டில் வேகமாக வளரும் பொருளாதார மாநிலமாகவும் மாறி உள்ளது என்றார்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பேசுகையில், 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

