sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியா, உலகின் 3 வது பெரிய சிவில் விமான போக்குவரத்து சந்தையாக மாறும்: ஏர்பஸ் கணிப்பு

/

இந்தியா, உலகின் 3 வது பெரிய சிவில் விமான போக்குவரத்து சந்தையாக மாறும்: ஏர்பஸ் கணிப்பு

இந்தியா, உலகின் 3 வது பெரிய சிவில் விமான போக்குவரத்து சந்தையாக மாறும்: ஏர்பஸ் கணிப்பு

இந்தியா, உலகின் 3 வது பெரிய சிவில் விமான போக்குவரத்து சந்தையாக மாறும்: ஏர்பஸ் கணிப்பு


ADDED : ஜன 29, 2026 06:38 PM

Google News

ADDED : ஜன 29, 2026 06:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐதராபாத்: 2035 ஆம் ஆண்டிற்குள் இந்தியா, உலகின் 3வது பெரிய சிவில் விமான போக்குவரத்து சந்தையாக மாறும் என்று ஏர்பஸ் நிறுவனம் உறுதிபடுத்தி உள்ளது.

சிவில் மற்றும் ராணுவ விமானங்களை உற்பத்தி செய்யும் ஐரோப்பிய நிறுவனமான ஏர்பஸ், அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வணிக ரீதியிலான விமானங்களின் எண்ணிக்கை மும்மடங்காக உயர்ந்து 2,250 விமானங்களை எட்டும் என்றும், 2035 ஆம் ஆண்டிற்குள் இந்தியா உலகின் 3வது பெரிய சிவில் விமான போக்குவரத்து சந்தையாக மாறும்.

இது தொடர்பாக, விங்ஸ் இந்தியா 2026 நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜூர்கன் வெஸ்டர்மேயர் கூறியதாவது:

இந்தியாவின் விமான பயணிகள் பயணிகள் போக்குவரத்து ஆண்டுக்கு 8.9 சதவீதம் என்ற விகிதத்தில் வளரும். இது உலகளாவிய சராசரியை விட அதிகம்.

தனிநபர் விமானப் பயண விகிதம் அடுத்த பத்தாண்டுகளில் 0.13-லிருந்து 0.29-ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விமான நிறுவனங்கள் சர்வதேச வழித்தடங்களில் தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் விரிவாக்கத்தில் ஈடுபடுகின்றன.ஜி20 நாடுகளிலேயே மிக வேகமான பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்புக்கான அரசின் செலவினங்கள், பயணிகள் நடத்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.

இந்திய மக்கள் விமானப் போக்குவரத்தை ஒரு போக்குவரத்துச் சாதனமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

இந்திய விமான நிறுவனங்கள் 1,700-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளன, மேலும் இந்த நிலுவையில் உள்ள ஆர்டர்களில் 72 சதவீதம் எங்களது நிறுவனத்தைச் சேர்ந்தவை. அடுத்த 10 ஆண்டுகளில் தற்போதுள்ள 150 விமான நிலையங்களுடன் மேலும் 50 விமான நிலையங்களை இந்தியா சேர்க்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அசெம்பிள் செய்யப்பட்ட முதல் ஏர்பஸ் சி-295, இரட்டை எஞ்சின் கொண்ட நடுத்தர ராணுவப் போக்குவரத்து விமானம், 2026-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வழங்கப்படும்.

இவ்வாறு ஜூர்கன் வெஸ்டர்மேயர் கூறினார்.






      Dinamalar
      Follow us