2 பாக்., விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்தியப் படை
2 பாக்., விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்தியப் படை
UPDATED : மே 10, 2025 07:09 AM
ADDED : மே 10, 2025 06:45 AM

புதுடில்லி: பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. இந்திய நகரங்கள் மீது தாக்குதல் நடத்த வந்த இரண்டு பாகிஸ்தான் விமானப்படை விமானங்களை நமது ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
இந்தியா - பாக்., இடையே போர் பதற்றம் அதிகரித்ததும், எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இருந்து பாக்., ராணுவம் இந்தியா மீது ட்ரோன்கள், ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு நம் பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். எல்லை பகுதியில் உள்ள பாக்., ராணுவ தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது.
தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் தனது வான்வழியை மூடியது. பாகிஸ்தானின் ராணுவ தளங்களை இந்தியா துல்லியமாக குறி வைத்து தாக்கும் வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படங்கள் ராணுவ தளங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளதை விளக்குகிறது.
நான்கு பாகிஸ்தான் ராணுவ தளங்கள் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளன. இந்திய நகரங்கள் மீது தாக்குதல் நடத்த வந்த இரண்டு பாகிஸ்தானிய ஜெட் விமானங்களை நமது ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. ஸ்ரீநகர் மற்றும் அவந்திபுரா பகுதியில் இந்த விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
சுட்டு வீழ்த்தப்பட்ட விமான பைலட்டுகளை ராணுவத்தினரும், போலீசாரும் தேடி வருகின்றனர்.