ரூ.5.5 லட்சம் கட்டணத்தில் ஆடம்பர ரிசார்ட்; இணையத்தில் சூடு கிளப்பிய விவாதம்!
ரூ.5.5 லட்சம் கட்டணத்தில் ஆடம்பர ரிசார்ட்; இணையத்தில் சூடு கிளப்பிய விவாதம்!
ADDED : செப் 18, 2024 02:04 PM

புதுடில்லி: கென்யா சுற்றுலா சென்ற இந்திய தம்பதி, ரிசார்ட்டில் ஒரு நாளைக்கு ரூ.5.5 லட்சம் கட்டணம் செலுத்தி தங்கியுள்ளனர். தம்பதி இணையத்தில் இந்த தகவலை பகிர்ந்ததும், ராக்கெட் வேகத்தில் விவாதம் கிளம்பியுள்ளது.
கென்யாவின் ஆடம்பர விடுதிகளில் ஒன்றாக மசாய் மாரா நேஷனல் ரிசார்ட் உள்ளது. இங்கு இந்திய தம்பதி அனிர்பன் சவுத்ரியும், அவரது மனைவியும் தங்கியுள்ளனர். ஆடம்பரமான ரிசார்ட்டில் 5 இரவுகளை கழித்தனர். இவர்கள் தங்களது அனுபவத்தை இணையதளத்தில் பகிர்ந்து கொண்டனர்.
இது குறித்து அந்த தம்பதியினர் சமூகவலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'நீங்கள் சொகுசு வாழ்க்கை குறித்து கனவு காண்கிறீர்கள் என்றால், இது தான் இடம். கூடார அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. ரிசார்ட்டில் ஒரு இரவுக்கு ரூ.5.5 லட்சம் செலவு ஆனது. 5 இரவுகளுக்கு மொத்தம் ரூ.27.5 லட்சம், என குறிப்பிட்டிருந்தனர். ரிசார்ட்டில் இருக்கும் வசதிகள் குறித்தும் பகிர்ந்து இருந்தனர்.
புகழ்பெற்ற மசாய் மாரா நேஷனல் ரிசார்ட்டில் 22 ஆடம்பர கூடார தங்குமிடங்கள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் 1,220 சதுர அடி அளவில் உள்ளன, மேலும் பல்வேறு நவீன வசதிகள் உள்ளன. ரிசார்ட்டில் பார்க்கும் அனைத்து இடங்களும் பசுமையாக உள்ளன. இந்த ரிசார்ட்டில் இந்திய தம்பதி எடுத்த புகைப்படம் மற்றும் சிறப்புகள் குறித்து இணையதளத்தில் பகிர்ந்ததும் விவாதம் கிளம்பி உள்ளது.
ஒரு சிலர், 'பணக்காரன் என்பதை காட்டுவதற்கு இப்படி தகவல்களை பகிர்ந்துள்ளனர் என கமென்ட் செய்துள்ளனர். ஒரு சிலர் வாழ்க்கை வாழ்வதற்கே என பாராட்டியுள்ளனர். இது அடுத்த நிலை ஆடம்பரம். நம்ப முடியாத அளவுக்கு தம்பதியினர் செலவு உள்ளது என்றும் இணையத்தில் பலரும் கமென்ட் செய்து வருகின்றனர்.