'இந்திய வரலாற்று சம்பவங்கள் பிரிட்டிஷாரால் திருத்தப்பட்டன'
'இந்திய வரலாற்று சம்பவங்கள் பிரிட்டிஷாரால் திருத்தப்பட்டன'
ADDED : மே 30, 2025 07:13 AM

ஜெய்ப்பூர் : ''பிரிட்டிஷ் ஆட்சியின்போது, பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்களால் நம் நாட்டின் வரலாற்று சம்பவங்கள் திருத்தி எழுதப்பட்டன,'' என, ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாவ் பகாடே கூறினார்.
ராஜஸ்தானின் உதய்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மாநில கவர்னர் ஹரிபாவ் பகாடே பேசியதாவது: நம் நாட்டின் உண்மையான வரலாறுகள் பல மறைக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஆட்சியின்போது, பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்களால் திருத்தி எழுதப்பட்டன. குறிப்பாக, முகலாய மன்னர் அக்பர், ராஜ்புத் அரசரின் மகளான ஜோதா பாயை திருமணம் செய்ததாக வரலாறு மாற்றி எழுதப்பட்டுள்ளது. உண்மையில், தன் வேலைக்காரர் ஒருவரின் மகளையே, அக்பருக்கு, ராஜ்புத் அரசரான பர்மால் திருமணம் செய்து வைத்தார்.
இது போலவே ராஜ்புத் அரசர் மஹாராணா பிரதாப், போரை நிறுத்திக் கொள்வதாக அக்பருக்கு கடிதம் எழுதியதாக வரலாற்று உண்மை மாற்றி எழுதப்பட்டுள்ளது. அவர் எப்போதும் தன்மானத்தை விட்டுக் கொடுத்ததில்லை.
ஆனால், மஹாராணா பிரதாப் பற்றி கற்றுக் கொடுக்காமல், நம் வரலாற்று புத்தகங்கள், அக்பர் குறித்தே அதிகம் பேசுகின்றன. இவ்வாறு பேசினார்.