ககன்யான் திட்டப் பணிகள் விறுவிறுப்பு: வீரர்களை மீட்க ஒத்திகை
ககன்யான் திட்டப் பணிகள் விறுவிறுப்பு: வீரர்களை மீட்க ஒத்திகை
UPDATED : டிச 12, 2024 04:43 PM
ADDED : டிச 10, 2024 09:06 PM

விசாகப்பட்டினம்: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, மீண்டும் பூமிக்கு திரும்பும், 'ககன்யான்' கலத்தின் சோதனை நடவடிக்கை இஸ்ரோ மற்றும் இந்திய கடற்படையால் வெற்றிகரமாக நேற்று நடத்தப்பட்டது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் செயல்படுத்துகிறது. இதற்காக, நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் இறுதிக்கட்ட பயிற்சியில் உள்ளனர்.