ADDED : அக் 12, 2025 11:55 PM

மணிலா: திருமணமான பெண்கள் பங்குபெறும் பிரபஞ்ச அழகி போட்டியில் முதன் முறையாக இந்தியாவைச் சேர்ந்த, ஷெரி சிங், 35, என்பவர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
'மிசஸ் யுனிவர்ஸ்' என்ற பெயரில் திருமணமான பெண்களுக்கான அழகி போட்டி 1977ல் துவங்கப்பட்டது.
இதன் 48வது ஆண்டு போட்டி தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் மணிலா நகரில் நடந்து வந்தது. இதில் 120க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இந்த போட்டியின் முடிவு கள் நேற்று அறிவிக்கப்பட்டன.
இந்தியாவைச் சேர்ந்த ஷெரி சிங் 'மிசஸ் யுனிவர்ஸ்' பட்டத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டி துவங்கிய, 48 ஆண்டுகளில் முதன் முறையாக இந்திய பெண் ஒருவர் இப்பட்டத்தை பெறுகிறார்.
டில்லியைச் சேர்ந்தவரான ஷெரி சிங்கிற்கு திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மகன் உள்ளார். பேஷன் டிசைனிங் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.