ADDED : அக் 12, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமராவதி: ஆந்திராவில் போலி மதுபானங்கள் விற்பனையை தடுக்கும் வகையிலும், மது பாட்டில் அசலா என கண்டறிவதற்கும், புதிய செயலி நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. 'ஆந்திரா கலால்துறை சுரக் ஷா ஆப்' என்ற இந்த செயலியை முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிமுகம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த செயலியை பயன்படுத்தி மது பாட்டில்கள் மீதுள்ள ஹாலோகிராம்களை ஸ்கேன் செய்தால், அந்த பாட்டில் ஒரிஜினலா, போலியானதா என கண்டறியலாம். மது உற்பத்தி செய்யப்பட்ட நாள், நேரம் போன்றவற்றை அறியலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.