டில்லியில் தொற்று பதிவு: மலேரியா அதிகம்; டெங்கு குறைவு
டில்லியில் தொற்று பதிவு: மலேரியா அதிகம்; டெங்கு குறைவு
ADDED : நவ 24, 2025 07:28 PM

புதுடில்லி: டில்லியில் கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவில் நவம்பர் மாதத்தில் மலேரியா பாதிப்பு அதிகபட்சமாக பதிவாகியது, அதேவேளையில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது என்று டில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து டில்லி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
டில்லியில் நவம்பர் மாதத்தில் இதுவரை 67 பேருக்கு மலேரியா தொற்று பதிவாகியுள்ளது, இது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை ஆகும், கடந்த 4 ஆண்டுகளில் முறையே 57 பேருக்கு (2024) 26 பேருக்கு (2023) 36 பேருக்கு (2022) 7 பேருக்கு (2021) தொற்று பதிவாகி இருந்தது.
டில்லி முழுவதும் இந்தாண்டில் 690 பேருக்கு மலேரியா தொற்று பதிவாகி , கடந்த ஆண்டை(744 பேருக்கு) காட்டிலும் சற்று குறைந்தாலும், கடந்த 2023 ஆம் ஆண்டு(369 பேருக்கு) பதிவானதை விட அதிகபட்சமாகும்.
அதே சமயம், டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கணிசமாகக் குறைந்துள்ளன.
இவ்வாறு மாநகராட்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

