போலி மருத்துவ அறிக்கை கேட்டு எம்.பி.,யிடம் இருந்து மிரட்டல்: தற்கொலை செய்த பெண் டாக்டரின் கடிதத்தில் தகவல்
போலி மருத்துவ அறிக்கை கேட்டு எம்.பி.,யிடம் இருந்து மிரட்டல்: தற்கொலை செய்த பெண் டாக்டரின் கடிதத்தில் தகவல்
ADDED : அக் 25, 2025 11:46 PM

மும்பை: மஹாராஷ்டிராவில், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாக கையில் குறிப்பு எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட பெண் டாக்டர், போலி மருத்துவ அறிக்கை தயாரிக்க கேட்டு எம்.பி., ஒருவர் மிரட்டல் விடுத்ததாகவும் கடிதம் எழுதி உள்ளார்.
மஹாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் சதாரா மாவட்டத்தில் உள்ள பல்தான் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவர், பல்தானில் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
கைது போலீஸ் அதிகாரி, சாப்ட்வேர் இன்ஜினியர் என இருவர் கொடுத்த பாலியல் தொல்லையால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முடிவை எடுத்ததாக அவரது உள்ளங்கையில் குறிப்பு எழுதியிருந்தார்.
அதில், 'போலீஸ் எஸ்.ஐ., கோபால் படானே, கடந்த ஐந்து மாதத்தில் நான்கு முறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். சாப்ட்வேர் இன்ஜினியரும், நான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மகனுமான பிரசாந்த் பங்கரும் மன ரீதியாக தொல்லை கொடுத்தனர்' என, கூறியிருந்தார்.
பி ரசாந்த் பங்கரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள எஸ்.ஐ., கோபால் படானேவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், தற் கொலைக்கு முன் பெண் டாக்டர் எழுதிய நான்கு பக்க கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு எம்.பி ., போலி மருத்துவ அறிக்கைகளை கேட்டு மிரட்டியதாக அவர் குற் றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித் து அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
எம்.பி.,யின் இரு உதவியாளர்கள் நான் பணியாற்றும் மருத்துவமனைக்கு நேரில் வந்து என்னை மிரட்டினர். அப்போது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என நான் பதிலளித்த போது, வேறு விதமாக என்னை கவனித்துக் கொள்வதாக மிரட்டினர்.
எம் .பி.,க்கு தொடர்புடைய குற்றஞ்சாட்டப்பட்டவரின் மருத்துவ நிலைமை மிகவு ம் மோசமாக இருந்தது. அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என நான் கூறினேன். ஆனால், எம்.பி.,யின் ஆட்கள் அதை ஏற்கவில்லை.
ஆவேசம் குற்றஞ்சாட்டப்பட்டவர் நன்றாக இருப்பதாக மருத்துவ அறிக்கை தரும்படி கேட்டனர். அதற்கு நான் ஒப்புக்கொள்ளாததால், போலீஸ் எஸ்.ஐ., என்னிடம் கடுமையாக நடந்து கொண்டார். மருத்துவமனை என்று கூட பார்க்காமல் ஆவேசமாக மிரட்டினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தவறான பிரேத பரிசோதனை அறிக்கைகள் கேட்டு போலீசாரிடம் இருந்தும், அரசியல்வாதிகளிடம் இருந்தும் பெண் டாக்டருக்கு நிறைய அழுத்தங்கள் வந்ததாக, அவரது உறவினர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து கடந்த ஜூன் மாதம் போலீஸ் உயர திகாரிகளின் கவனத்திற்கு எடு த்துச் சென்றும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என, அவர் தெரிவித் துள் ளார்.

