பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அநீதி: சொல்கிறார் ராகுல்
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அநீதி: சொல்கிறார் ராகுல்
ADDED : அக் 09, 2025 09:50 PM

புதுடில்லி: ஹரியானாவில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான அநீதி உச்சத்தில் உள்ளது தெரியவந்துள்ளது என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
ஹரியானாவில் ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி பூரன்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஹரியானாவில் தற்கொலை செய்து கொண்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி பூரன்குமார் தனது சாதியின் காரணமாக அவமானத்தையும், ஒடுக்குமுறைகளையும் தாங்க வேண்டியிருக்கும் போது சாதாரண தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
ரேபரேலியில் வால்மிகி என்பவர் கொலை, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு அவமானம், இப்போது ஐபிஎஸ் அதிகாரியின் தற்கொலை. இந்த சம்பவங்கள் அனைத்தும் சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரான அநீதி உச்சத்தில் இருப்பதைக் காட்டுகின்றன.பாஜ ஆர்எஸ்எஸ் சிந்தனை சமூகத்தில் விஷயத்தை பரப்பியுள்ளது.
தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நீதிக்கான நம்பிக்கையை இழந்துவிட்டனர்.இந்த போராட்டம் பூரன்குமாருக்காக மட்டும் அல்ல. அரசியல் அமைப்பு, சமத்துவம் மற்றும் நீதிக்காக போராடும் ஒவ்வொரு இந்தியருக்கான போராட்டமாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.