ADDED : செப் 25, 2025 01:21 AM

சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோல்வியடைந்ததால் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக எண்ண தோன்றுகிறது. அக்கட்சி வென்றால் மட்டுமே மாநில அந்தஸ்து மீட்கப்படும் என்றால், அது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். அதற்காக, மக்களை தண்டிக்க முடியாது .
ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி
இது துவக்கம் தான்!
2025ல் நடக்கும் சட்டசபை தேர்தல் பீஹாருக்கு மட்டுமல்ல, நாட்டிற்கே ஒரு மைல்கல்லாக இருக்கும். இது, பிரதமர் மோடியின் ஊழல் ஆட்சிக்கு முடிவுரையை ஏற்படுத்துவதற்கான துவக்கம் தான். ஓட்டு திருட்டை அரங்கேற்றும் தேர்தல் கமிஷன், வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
மல்லிகார்ஜூன கார்கே தேசிய தலைவர், காங்கிரஸ்
கூட்டணியில் இணைய தயார்!
பீஹார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் அமைந்துள்ள, 'மஹாகத்பந்தன்' கூட்டணியுடன் நாங்கள் இணைய தயாராக உள்ளோம். இத்தேர்தலில், ஆறு இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தேஜஸ்விக்கு கடிதம் எழுதியுள்ளோம். இனி, முடிவு அவர்களின் கைகளில் தான் உள்ளது.
அசாதுதீன் ஒவைசி தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,