உளவுத்துறையினர் எச்சரிக்கை: மும்பையில் பாதுகாப்பு அதிகரிப்பு
உளவுத்துறையினர் எச்சரிக்கை: மும்பையில் பாதுகாப்பு அதிகரிப்பு
UPDATED : செப் 28, 2024 11:22 AM
ADDED : செப் 28, 2024 09:54 AM

மும்பை: பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என மத்திய உளவுத்துறையினர் விடுத்த எச்சரிக்கை எதிரொலியாக மும்பையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளனர்.
மஹாராஷ்டிராவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. துர்கா பூஜை வர உள்ளது. அடுத்து தீபாவளி பண்டிகையும் நெருங்குகிறது.இதனால், கடைத்தெருக்கள், வீதிகள், வணிக வளாகங்களில் மக்கள் அதிகம் பேர் கூடுகின்றனர். ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் நெருங்கி வழிகிறது.
இந்நிலையில், மும்பையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். வழிபாட்டு தலங்களில் சந்தேகப்படும்படி ஏதாவது நடந்தால் தகவல் தெரிவிக்கும்படி நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தங்களது பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தும்படி போலீஸ் துணை கமிஷனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், பண்டிகை காலத்தை முன்னிட்டு பாதுகாப்பை அதிகரித்து உள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.