ADDED : செப் 09, 2024 03:41 AM

ஜம்மு - காஷ்மீர் ஹிந்துக்கள் தங்களுக்கு ஓட்டு போடுவர் என பா.ஜ., நினைத்தது. ஆனால் அவர்கள் மாறிவிட்டனர். இதனால் ராமர் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டு வந்த பா.ஜ., தற்போது அவர்களை மிரட்டி ஓட்டுகளை பெற முயற்சிக்கிறது.
- பரூக் அப்துல்லா, தலைவர், தேசிய மாநாட்டு கட்சி
மக்கள் விரும்பவில்லை!
தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த தர்மராவ்பாபாவின் மகள் எதிர் முகாமில் இணைய உள்ளதாக செய்திகள் வருகின்றன. அவர் கட்சியிலிருந்து விலக வேண்டாம். குடும்பத்தை பிரிப்பவர்களை மக்கள் விரும்புவது இல்லை. நானே அதை அனுபவித்துள்ளேன்.
- அஜித் பவார், மஹா., துணை முதல்வர், தேசியவாத காங்கிரஸ்
ஊகங்களுக்கு பதிலில்லை!
ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி குறித்த ஊகங்களுக்கு என்னால் கருத்து கூற முடியாது. தேர்தல் காலங்களில் இதுபோன்ற ஊகங்கள் தோன்றுவது இயல்பு. வரும் தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க ஹரியானா மக்கள் தயாராகிவிட்டனர்.
- பவன் கெரா, செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்