ஐ.பி.எஸ்., அதிகாரி சாலை விபத்தில் உயிரிழப்பு: முதல் பதவியேற்புக்கு வந்தபோது பரிதாபம்!
ஐ.பி.எஸ்., அதிகாரி சாலை விபத்தில் உயிரிழப்பு: முதல் பதவியேற்புக்கு வந்தபோது பரிதாபம்!
ADDED : டிச 02, 2024 04:10 PM

பெங்களூரு: கர்நாடகாவில் முதன் முதலாக பதவியேற்க வந்த ஐ.பி.எஸ்., அதிகாரி, சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நேற்று மாலை ஹசன்னிலிருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள கிட்டானே பகுதியில் நடந்தது. மத்திய பிரதேச மாநிலத்தின் சிங்ராவ்லி மாவட்டத்தில் உள்ள துாசர் என்ற கிராமத்தைசேர்ந்தவர், ஹர்ஷ் பர்தன்(26), இவர் 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ்., பயிற்சியை, மைசூருவில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் முடித்துள்ளார். 6 மாத மாவட்ட பயிற்சியை முடித்தார்.
பர்தனுக்கு கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹொலேநராசிபூரில் ஏ.எஸ்.பி.,யாக பதவி அளிக்கப்பட்டது. முதன் முதலில்பதவியேற்பதற்காக வந்த பர்தனின் கார் டயர் வெடித்ததால், காரை ஓட்டி வந்த மாவட்ட ஆயுதபடை கான்ஸ்டபிள் மஞ்சேகவுடா, நிலை தவறினார். இதனால் சாலையின் ஓரத்தில் இருந்த வீடு மற்றும் மரத்தின் மீது கார் மோதியது. இதில் பர்தன் தலையில் பலத்த காயங்களுடன் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஜனப்பிரியா மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவில் உயிரிழந்தார்.டிரைவர் சிறு காயங்களுடன் ஹசன் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
உயிரிழந்த பர்தனுக்கு, மாநில முதல்வர் சித்தராமையா இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.