திருப்பதி கோவிலுக்கு ரூ.3.66 கோடி நன்கொடை: உயில் எழுதிய ஐஆர்எஸ் அதிகாரி
திருப்பதி கோவிலுக்கு ரூ.3.66 கோடி நன்கொடை: உயில் எழுதிய ஐஆர்எஸ் அதிகாரி
ADDED : ஜூலை 24, 2025 06:56 PM

திருப்பதி: ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரியான பாஸ்கர் ராவ், ரூ.3.66 கோடி மதிப்புள்ள தன் வீடு, ரூ.66 லட்சம் ரொக்கப்பணத்தை தனது மரணத்திற்கு பிறகு திருப்பதி கோவிலுக்கு வழங்க உயில் எழுதி வைத்திருந்தார். அதன்படி அவை கோவில் நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டன.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் பாஸ்கர் ராவ், இவர் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி. இவர் தனது மரணத்திற்கு பின் ஐதராபாத்தின் வனஸ்தலிபுரத்தில் இருக்கும் 3,500 சதுர அடி கொண்ட ரூ.3 கோடி மதிப்பிலான வீடு மற்றும் ரூ.66 லட்சம் ரொக்கத்தை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்க வேண்டும் என்று உயில் எழுதினார்.
அவர் மரணம் அடைந்த நிலையில், பாஸ்கர் ராவின் விருப்பத்தின்படி, திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொத்துக்கள் ஒப்படைக்கப்பட்டன. திருப்பதி கோயிலின் ரங்கநாயக்குலா மண்டபத்தில் தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம், பாஸ்கர ராவ் நியமித்த எம். தேவராஜ் ரெட்டி, வி.சத்தியநாராயணா மற்றும் பி. லோகநாத் ஆகியோர் ஒப்படைத்தனர்.