
மிக துாய்மையான நகரம் என்ற பெருமை கொண்ட மத்திய பிரதேசத்தின் இந்துாரில் அசுத்தமான குடிநீரை குடித்து, 20 பேர் உயிரிழந்துள்ளனர். இது நகர்ப்புற திட்டமிடலின் தோல்வியை காட்டுகிறது. அரசு அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் ஊழல் காரணமாகவே இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- திக்விஜய சிங், ம.பி., முன்னாள் முதல்வர், காங்கிரஸ்
முதலீட்டாளர் ஆதரவு அரசு!
நிலம் ஒப்படைக்கப்பட்ட ஏழு மாதங்களில் ஆந்திராவின் ஸ்ரீசிட்டி நகரில் 'எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனம், கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்துள்ளது. இதன் மூலம் ஆந்திர அரசு முதலீட்டாளர்களுக் கு ஆதரவான அரசு என்பது நிரூபணமாகிஉள்ளது.
- நாரா லோகேஷ், ஆந்திர அமைச்சர், தெலுங்கு தேசம்.
வெறுப்புணர்வு அழைப்பு!
'எல்லைகளில் மட்டுமல்ல, தாக்குதல்கள் போன்ற நுாற்றாண்டு பழமையான நிகழ்வுகளுக்கும் பழிவாங்க நம்மை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்' என்று நாட்டை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியுள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான இந்த வெறுப்புணர்வு அழைப்பு துரதிருஷ்டவசமானது.
- மெஹபூபா முப்தி, தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி

