sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசியல் போராக மாறிய துர்கா பூஜை; பிராந்தியவாதமா; தேசியவாதமா?

/

அரசியல் போராக மாறிய துர்கா பூஜை; பிராந்தியவாதமா; தேசியவாதமா?

அரசியல் போராக மாறிய துர்கா பூஜை; பிராந்தியவாதமா; தேசியவாதமா?

அரசியல் போராக மாறிய துர்கா பூஜை; பிராந்தியவாதமா; தேசியவாதமா?


UPDATED : செப் 30, 2025 09:43 PM

ADDED : செப் 24, 2025 04:04 AM

Google News

UPDATED : செப் 30, 2025 09:43 PM ADDED : செப் 24, 2025 04:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேற்கு வங்கத்தின் கலாசார விழாவாக இருந்த துர்கா பூஜை பண்டிகை, இந்த ஆண்டு, பிராந்தியவாதம் - தேசிய வாதம் இடையேயான அரசியல் போர்க்களமாக மாறியுள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு அடுத்தாண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

'ஹாட்ரிக்' வெற்றி பெற்று, தொடர்ந்து 15 ஆண்டுகளாக முதல்வர் அரியணையில் இருக்கும் மம்தா பானர்ஜி, நான்காவது வெற்றியை எதிர்பார்த்துள்ளார்.

பாரம்பரியம்

இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்து திரிணமுல் காங்கிரசை விரட்டி அடிக்க வேண்டும் என்ற முனைப்பில், எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் தீவிரம் காட்டி வருகிறது. ஒரு காலத்தில் மேற்கு வங்கத்தின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் விழாவாக இருந்த துர்கா பூஜை, இந்த ஆண்டு அரசியல் செய்திகளை பரப்புவதற்கான தளமாக மாறியுள்ளது.

கொல்கட்டாவில் உள்ள ஸ்ரீ பூமி ஸ்போர்ட்ஸ் கிளப்பில், ஆளும் திரிணமுல் காங்., சார்பில் பிரமாண்ட துர்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தான் அரண்மனை வடிவில் அமைக்கப்பட்டுள்ள பந்தலை முதல்வரும், அக்கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி சமீபத்தில் திறந்து வைத்தார்.

அப்போது, மேற்கு வங்கத்தின் பெருமைகளை பற்றி பேசிய அவர், வெளியாட்களிடம் இருந்து மாநிலத்தின் கலாசாரம், மொழி, பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இங்கு 'வெளியாட்கள்' என மம்தா குறிப்பிடுவது, பா.ஜ.,வைத் தான்.

இதற்கு போட்டியாக, உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் வடிவில், கொல்கட்டாவில், பா.ஜ., சார்பில், காவி நிறத்தில் பிரமாண்ட துர்கா பூஜை பந்தல் திறக்கப்பட்டது. இதை பா.ஜ., மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி திறந்து வைத்தார். அப்போது, 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷங்கள் விண்ணை பிளந்தன.

சுவேந்து அதிகாரி கூறுகையில், ''மஹாளய அமாவாசைக்கு முன்பே துர்கா பூஜை பந்தலை திறந்து, ஹிந்துக்களை மம்தா பானர்ஜி அவமதித்து விட்டார். துர்கா பூஜை பண்டிகை நாட்டின் பாரம்பரியம். இது ஒரு கட்சி அல்லது மாநிலத்தின் சொத்து அல்ல,'' என்றார்.

அறிவுறுத்தல்


மம்தாவின் பிராந்தியவாத நிலைப்பாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தேசியவாத கருத்தை அவர் எதிரொலித்தார். இது, துர்கா பூஜை பண்டிகையை பிராந்திய கொண்டாட்டத்திலிருந்து ஹிந்து பெருமையின் தேசிய சின்னமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டது.

திரிணமுல் காங்கிரசுக்கு எதிரான அரசியல் போட்டியில், பா.ஜ.,வுக்கு வலுசேர்க்கும் வகையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் களத்தில் குதித்துள்ளது. துர்கா பூஜை பண்டிகையை ஹிந்துத்துவா பண்டிகையாக அந்த அமைப்பு கொண்டாடுகிறது.

மேற்கு வங்கம் முழுதும் பா.ஜ., சார்பில் அமைக்கப்படும் துர்கா பூஜை பந்தல்களில், அயோத்தி அல்லது வாரணாசி கருப்பொருளை பயன்படுத்த ஆர்.எஸ்.எஸ்., அறிவுறுத்தி உள்ளது. இதன் மூலம், பா.ஜ.,வின் தேசியவாத செய்தியுடன் ஆர்.எஸ்.எஸ்., ஒத்துப்போகிறது.

இந்த அரசியல் போட்டி, யார் அதிக பந்தல்களை திறக்கின்றனர் என்பதை பற்றியது மட்டுமல்ல, பண்டிகை எதை குறிக்கிறது? கட்சிகள் என்ன சொல்கின்றன என்பதை பற்றியதுமாகும்.

பக்தி மற்றும் கலையின் அங்கமாக துர்கா பூஜை இருந்தாலும், மேற்கு வங்கத்தில் அரசியல் போரின் அடையாளமாக மாறியுள்ளது. கொல்கட்டாவை கனமழை புரட்டிப் போட்டாலும், துர்கா பூஜை பந்தல்களில் அரசியல் அனல் வீசுகின்றன.

- நமது சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us