ADDED : நவ 08, 2024 11:00 PM

பொதுவாக வீட்டில் எந்த ஒரு நல்ல காரியங்கள், விசேஷங்கள் நடந்தால் இனிப்புடன் கொண்டாடுவது வழக்கம். வழக்கமாக வீட்டில் சர்க்கரை பொங்கல், பாயாசம் செய்வோம். ஆனால் கும்மாயம் செய்தும் அசத்தலாம். என்னது கும்மாயமா... இதுவரை கேள்விப்படாத பெயரா இருக்கேன்னு ஒரே குழப்பமா இருக்கா. கும்மாயம் என்பது ஒரு வகையான ஸ்வீட். மற்ற ஸ்வீட்களை விட இது வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். குழந்தைகள் விரும்பும் ஸ்வீட் ஆகவும் இருக்கும். கும்மாயம் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரை கப் உளுந்தம் பருப்பு
கால் கப் பாசிபருப்பு
2 டேபிள் ஸ்பூன் பச்சரிசி
ஒரு ஏலக்காய்
ஒரு டேபிள் ஸ்பூன் நெய்
ஒரு கப் வெல்லம்
2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய முந்திரி
செய்முறை:
ஒரு கடாயில் உளுந்தம் பருப்பை வறுத்து, நன்கு ஆற வைத்துக் கொள்ளுங்கள். பாசி பருப்பையும், பச்சரிசியையும் தனித்தனியாக வறுத்து ஆற வைக்கவும். அனைத்தையும் மிக்சியில் போட்டு, ஒரு ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
கடாயில் வெல்லம் சேர்த்து தண்ணீர் ஒரு டம்ளர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு நன்றாக கிளறவும். நெய் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். சிறிய கடாயில் நெய் சேர்த்து, முந்திரி பருப்பை போட்டு நன்றாக வறுத்து, அதையும் சேர்த்து நன்றாக கிளறவும். கெட்டியானதும், அடுப்பை அணைத்தால், சுவையான கும்மாயம் தயார்.
--- நமது நிருபர் - -