ADDED : ஆக 28, 2024 01:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் செல்ல உள்ளார்.
இது தொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா -சிங்கப்பூர் இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் விதமாக ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்தியா -சிங்கப்பூர் அமைச்சர்கள் மட்டத்திலான வட்டமேசை மாநாடு நடைபெற உள்ளது.
இதில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீ்த்தாராமன், ஜெய்சங்கர், பியூஸ் கோயல், அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இக்கூட்டத்திற்கு பின் பிரதமர் மோடி சிங்கப்பூர் வருகை தர உள்ளார். அதற்கான பயண தேதி இன்னும் முடிவாக வில்லை. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.