பா.ஜ., பிரமுகரை 'ஹனிடிராப்' செய்ய வர்த்துார் பிரகாஷ் முயற்சி?
பா.ஜ., பிரமுகரை 'ஹனிடிராப்' செய்ய வர்த்துார் பிரகாஷ் முயற்சி?
ADDED : டிச 26, 2024 06:26 AM
பெங்களூரு: கோலார் பா.ஜ., பிரமுகரை 'ஹனிடிராப்' செய்ய, முன்னாள் அமைச்சர் வர்த்துார் பிரகாஷ் முயற்சி செய்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பெங்களூரு பாகல்குண்டேயின் ஸ்வேதா, 40. பா.ஜ., முன்னாள் அமைச்சர் வர்த்துார் பிரகாஷ் தோழி என்று கூறி, அவென்யு சாலையில் உள்ள நகைக்கடையில் இருந்து 2.42 கோடி ரூபாய்க்கு நகை வாங்கி பணம் கொடுக்காமல் ஏமாற்றினார். கடை உரிமையாளர் சஞ்சய் பாப்னா அளித்த புகாரில், ஸ்வேதா கைது செய்யப்பட்டார்.
ஸ்வேதாவின் மொபைல் போனில், வர்த்துார் பிரகாஷ் நம்பரை 'குலோப் ஜாமூன்' என்றும், கோலார் பா.ஜ., பிரமுகர் ஒருவரின் நம்பரை, 'மைசூரு பாக்' என்றும் பதிவு செய்திருந்தார்.
வர்த்துார் பிரகாஷுக்கும், பா.ஜ., பிரமுகருக்கும் இடையில், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், சீட் வாங்கும் விஷயத்தில் போட்டி ஏற்பட்டது. ஆனாலும் வர்த்துார் பிரகாஷ் சீட் வாங்கினார். அந்த பிரமுகருக்கு இந்த விஷயத்தில் தோல்வி ஏற்பட்டது.
அடுத்த தேர்தலில் சீட் வாங்குவதற்கும் பிரச்னையாக இருக்க கூடாது என்று, பா.ஜ., பிரமுகரை, ஸ்வேதா மூலம் 'ஹனிடிராப்' செய்ய முயற்சி செய்து இருக்கலாம் என்றும், போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதுபற்றி விசாரணை நடக்கிறது.

