ஹமாஸ் தந்த 3 பிணை கைதிகள் உடலுக்கு ஈடாக 45 சடலங்களை ஒப்படைத்தது இஸ்ரேல்
ஹமாஸ் தந்த 3 பிணை கைதிகள் உடலுக்கு ஈடாக 45 சடலங்களை ஒப்படைத்தது இஸ்ரேல்
ADDED : நவ 04, 2025 07:05 AM

ஜெருசலேம்:  ஹமாஸ் பயங்கரவாதிகள் ஒப்படைத்த  மூன்று பிணைக்கைதிகளின் உடலுக்கு ஈடாக, 45 பாலஸ்தீனியர்களின் சடலங்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த போர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சியால் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
இதன் ஒரு பகுதியாக ஹமாஸ் வசம் உள்ள பிணைக்கைதிகளையும், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களையும் பரஸ்பரம் விடுவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
மேலும், ஹமாஸிடம் இருக்கும் பிணைக்கைதிகளின் உடல்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் இஸ்ரேல் பெற்று வருகிறது.
மொத்தம், 28 பிணைக்கைதிகளின் உடல்களில் 20 ஒப்படைக்கப்பட்டன. இப்போது காசாவில், எட்டு உடல்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
நேற்று முன்தினம் ஹமா ஸ் பயங்கரவாதிகள், மூன்று பிணைக் கை திகளி ன் உடல்களை ஒப்படைத்தனர். அவர்கள் 2023ல் போர் தொடங்கியபோது  கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் என்று இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ள து .
அதற்கு பதிலாக, 45 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் நேற்று ஒப்படைத்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு பிணைக் கைதியின் உடலுக்குப் பதிலாக இஸ்ரேல் 15 பாலஸ்தீனர்களின் உடல்களை விடுவிக்கிறது.  இதன் மூலம், போர்நிறுத்தம் தொடங்கியதிலிருந்து திருப்பித் தரப்பட்ட பாலஸ்தீனர்களின் உடல்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை இஸ்ரேல் ஒப்படைத்த உடல்களில் 75 மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், டி.என்.ஏ., சோதனை கருவிகள் பற்றாக்குறை காரணமாக அடையாளம் காணும் பணி சிக்கலாக உள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவி த்தது.
உடல்களின் புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டு, குடும்பத்தினர் அடையாளம் காண உதவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

