இஸ்ரோவின் 100வது ராக்கெட்; வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி., எப்15
இஸ்ரோவின் 100வது ராக்கெட்; வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி., எப்15
UPDATED : ஜன 29, 2025 07:19 AM
ADDED : ஜன 29, 2025 06:26 AM

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ சார்பில் ஜி.எஸ்.எல்.வி., எப்15 ராக்கெட், இன்று ஜன.,29ம் தேதி காலை 6:23 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது.
விண்வெளி துறையில் உலக நாடுகளை திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு சாதனைகளை இந்தியா படைத்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரோவின் 100வது ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது.
இன்று (ஜன.,29) காலை 6.23 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2வது ஏவுதளத்தில் இருந்து என்.வி.எஸ்-02 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
இந்த செயற்கைக்கோளை வடிவமைப்பதற்கு, இந்திய தொழில்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன. இந்த ராக்கெட், ஜி.பி.எஸ்., சேவை அளிப்பதற்கான என்.வி.எஸ்.,01 என்ற செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்தியது.
இந்த NVS -02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களை தெரிவிக்கும்.
இந்தியா சாதனை!
இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:
* இந்தியா சாதனை படைத்துள்ளது.
* விக்ரம் சாராபாய் முயற்சியில் தொடங்கப்பட்ட ராக்கெட் கனவு திட்டம் 100ஐ தொட்டுள்ளது.
* 100 ராக்கெட்கள் மூலம் 548 செயற்கைக்கோள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளன.
* இஸ்ரோவின் முயற்சிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.