ADDED : டிச 31, 2024 05:44 AM

பெங்களூரு: தகவல் தொழில்நுட்ப ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில், மனைவி, மாமியார், மைத்துனரின் ஜாமின் மனு விசாரணை, இன்று ஒத்தி வைக்கப்பட்டது.
பெங்களூரு மாரத்தஹள்ளி முனேனகோலாவில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த அதுல் சுபாஷ், 34, தற்கொலை செய்து கொண்டார்.
இவரின் தற்கொலை, நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், உச்ச நீதிமன்றமும், வரதட்சணை கொடுமை புகாரை தங்களுக்கு ஏற்படி வளைக்க கூடாது என்று எச்சரித்திருந்தது.
அதுல் சுபாஷின் சகோதரர் அளித்த புகாரின்படி, சுபாஷின் மனைவி நிகிதா, மாமியார் நிஷா, மைத்துனர் அனுராக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி, சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது தரப்பு வாதத்தை எடுத்துரைத்தார்.
இதை ஏற்க மறுத்த, அரசு தரப்பு வழக்கறிஞர் பாக்யலட்சுமி, தனது தரப்பு வாதத்தை நாளை (இன்று) அளிப்பதாக தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்தது.