தேர்தலில் போட்டியிட பணம் தேவை என்பது உண்மை: நிதின் கட்கரி சொல்கிறார்!
தேர்தலில் போட்டியிட பணம் தேவை என்பது உண்மை: நிதின் கட்கரி சொல்கிறார்!
ADDED : மார் 18, 2024 10:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: 'தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு கட்சிக்கும் பணம் தேவை என்பது உண்மை' என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறினார்.
இது குறித்து நிதின் கட்கரி கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து நான் கருத்து கூற மாட்டேன். தேர்தல் பத்திரங்கள் இல்லாவிட்டால், கருப்புப் பணம் உள்ளே வரும். தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டதால், பணம் பெறுவதற்கு வேறு வழிகளை தேர்ந்தெடுப்பார்கள். அது நிச்சயம் விரைவில் நடக்கும்.
தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு கட்சிக்கும் பணம் தேவை என்பது உண்மை. அந்த பணத்தை பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெறுவது பொருளாதாரத்தை உயர்த்த உதவும். இந்த எண்ணத்தில் தான் தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

