இந்தோ - திபெத் படையில் 819 காலிப்பணியிடம்: சமையல் படித்தவர்களுக்கு வாய்ப்பு!
இந்தோ - திபெத் படையில் 819 காலிப்பணியிடம்: சமையல் படித்தவர்களுக்கு வாய்ப்பு!
ADDED : ஆக 28, 2024 08:42 AM

புதுடில்லி: இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) 819 கான்ஸ்டபிள் ( சமையலறை) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அக்.,1 கடைசி தேதியாகும்.
இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 819 'கான்ஸ்டபிள்' (சமையல் பணி) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ஆண்களும் 697 இடங்களும், பெண்களுக்கு 122 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி என்ன?
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் உணவு தயாரிப்பு அல்லது சமையல் பணி குறித்து பயின்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://recruitment.itbpolice.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
பொது பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100. எஸ். சி, எஸ்.டி., மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுள்ளது.
தேர்வு செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி அக்டோபர் 1.