கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக எஸ்ஐஆர் பணிகளை உடனே நிறுத்த வேண்டும்: சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தாக்கல்
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக எஸ்ஐஆர் பணிகளை உடனே நிறுத்த வேண்டும்: சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தாக்கல்
ADDED : நவ 17, 2025 03:47 PM

புதுடில்லி: கேரளாவில் எஸ்ஐஆர் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதே நேரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது.
,இந் நிலையில், கேரளாவில் எஸ்ஐஆர் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தக்கோரி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் அக்கட்சி வழக்கு ஒன்றையும் தொடுத்துள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது;
டிச.9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தலை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. எஸ்ஐஆரைத் தொடர்ந்து டிச.4ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தேர்தல் செயல்முறைக்கு இணையாக, எஸ்ஆர்ஐ பணிகளை தொடங்குவது தேர்தல் நடைமுறைக்கு முரணானது. காலக்கெடு விதித்த தேர்தல் கமிஷனின் முடிவு தன்னிச்சையானது.
குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது, இத்தகைய (எஸ்ஐஆர்) நடைமுறைக்கு ஒரு மாதம் அவகாசம் (நவ.4 முதல் டிச.4 வரை) தரப்படுவது மிகவும் போதுமானது இல்லை. இதன் மூலம் வாக்காளர்கள் பெருமளவு நீக்கப்படும் அபாயம் உள்ளது.
மேலும், கேரளாவில் பூத் அதிகாரி அனிஷ் ஜார்ஜ் பணி அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே இந்த நடைமுறையை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த வழக்கில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் குறிப்பிட்டு உள்ளது.

