தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஜெகதீஷ் ஷெட்டர் ஆதரவாளர்கள் மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தனர்

ஜெகதீஷ் ஷெட்டர் ஆதரவாளர்கள் மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தனர்

ஜெகதீஷ் ஷெட்டர் ஆதரவாளர்கள் மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தனர்


ADDED : பிப் 29, 2024 07:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 07:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தார்வாட் : முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பா.ஜ.,வில் சேர்ந்த ஒரு மாதத்திற்கு பின், அவரது ஆதரவாளர்களும், மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தனர்.

கடந்த சட்டசபை தேர்தலில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு, பா.ஜ., மேலிடம் சீட் மறுத்ததால், காங்கிரசில் சேர்ந்து தோல்வி அடைந்தார்.

ஆனாலும், அவருக்கு எம்.எல்.சி., பதவி வழங்கப்பட்டது. அவரது ஆதரவாளர்களும் காங்கிரசில் இணைந்தனர்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, லிங்காயத் ஓட்டுகளை கவரும் வகையில், ஜெகதீஷ் ஷெட்டரிடம் பா.ஜ.,வினர் தொடர்ந்து நடத்திய சமாதான பேச்சால், காங்கிரசில் இருந்து விலகி, மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தார்.

ஒரு மாதம் கழித்து, நேற்று தார்வாடில் நடந்த கூட்டத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் முன்னிலையில், அவரது ஆதரவாளர்கள் மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தனர்.

அப்போது ஜெகதீஷ் ஷெட்டர் பேசியதாவது:

பா.ஜ.,வில் நேற்று இணைந்த அனைவரும் கடந்த காலங்களில் கட்சித் தொண்டர்களாக பணியாற்றியவர்கள். பல பதவிகளில் திறம்பட பணியாற்றினர். இவர்களின் வருகையால் கட்சி மேலும் பலம் பெற்றுள்ளது.

காங்கிரசை நம்பும் நிலையில் மக்கள் இல்லை. வரும் நாட்களில் மேலும் பல காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.,வில் இணைய உள்ளனர். காங்கிரசின் பலம் குறைந்து, நாளுக்கு நாள் பா.ஜ., பலம் பெற்று வருகிறது.

விதான் சவுதாவில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று காங்கிரசார் குரல் எழுப்புகின்றனர் என்றால், அவர்களின்மனநிலை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இம்முறை லோக்சபா தேர்தலில் பா.ஜ., தனிப்பெரும்பான்மையான 370 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களிலும் வெற்றி பெறும். கர்நாடகத்தில் 28 தொகுதிகளிலும் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் முன்னிலையில், அவரது ஆதரவாளர்கள் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தனர். இடம்: தார்வாட்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us