ஆந்திராவில் ஜெகன் கட்சி எம்.பி., சந்திரபாபு கட்சிக்கு ஓட்டம்
ஆந்திராவில் ஜெகன் கட்சி எம்.பி., சந்திரபாபு கட்சிக்கு ஓட்டம்
UPDATED : பிப் 21, 2024 09:48 PM
ADDED : பிப் 21, 2024 07:37 PM

அமராவதி: ஆந்திராவில் ஆளும் ஜெகன் கட்சி எம்.பி.க்களின் கட்சி தாவும் படலம் தொடர்கிறது. இன்று அகட்சியைச் சேர்ந்த வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி என்ற எம்.பி,. அக்கட்சியிருந்து விலகினார்.
லோக்சபா தேர்தல் ஒரிரு மாதங்களில் நடக்க உள்ளது. தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் ஆந்திராவில் ஆளும் ஓய்.எஸ்.ஆர்., காங்., கட்சி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ராஜ்யசபா எம்.பி.,யாக 2018-ம் ஆண்டு தேர்வு பெற்ற வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி என்பவர் வரும் லோக்சபா தேர்தலில் நெல்லூர் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் இவருக்கு சீட் வழங்க ஜெகன் மோகன் ரெட்டி மறுத்தார்.
இதையடுத்து தனது ராஜ்யசபா எம்.பி., பதவி காலம் நிறைவடைய ஒரு ஆண்டு உள்ள நிலையில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தெலுங்கு சேதம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுமுன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அக்கட்சி சார்பில் நெல்லூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட உள்ளதாக வெமி ரெட்டி பிரபாகர் ரெட்டி தெரிவித்தார்.
ஏற்கனவே ஜெகன்மோகன் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் கட்சி தாவி வரும் நிலையில் இன்று ஒரு எம்.பி., கட்சி தாவியது குறிப்பிடத்தக்கது.

