எங்கு பார்த்தாலும் ஜெய் ஸ்ரீராம் கோஷம்!: அயோத்தியில் கோலாகலம்
எங்கு பார்த்தாலும் ஜெய் ஸ்ரீராம் கோஷம்!: அயோத்தியில் கோலாகலம்
ADDED : ஜன 22, 2024 12:36 PM

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் ஜெய் ஸ்ரீராம் கோஷமே ஒலித்தது. பல நூற்றாண்டு கனவான ராமர் கோவிலின் திறப்பால் பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா இன்று (ஜன.,22) கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த சிறப்பு வாய்ந்த விழாவில் பங்கேற்று, குழந்தை வடிவிலான ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார். விழாவை காண நாடு முழுவதும் இருந்து முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஹிந்து அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அயோத்தியில் குவிந்தனர்.