அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் ஜெய்சங்கர் போனில் பேச்சு
அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் ஜெய்சங்கர் போனில் பேச்சு
ADDED : ஜன 14, 2026 07:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் ஒரு நல்ல உரையாடலை நடத்தினேன்.
வர்த்தகம், முக்கிய கனிமங்கள், அணுசக்தி ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் எரிசக்தி குறித்து விவாதித்தோம்.
இவை மற்றும் பிற பிரச்னைகள் குறித்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
அமெரிக்கா- இந்தியா இடையே நடந்து வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் அடுத்த மாதம் நடைபெறக்கூடிய சந்திப்பு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கின்றனர்.

