ஜக்கி வாசுதேவிற்கு மூளை அறுவை சிகிச்சை: உடல்நலம் தேறி வருகிறார்
ஜக்கி வாசுதேவிற்கு மூளை அறுவை சிகிச்சை: உடல்நலம் தேறி வருகிறார்
UPDATED : மார் 20, 2024 08:59 PM
ADDED : மார் 20, 2024 07:08 PM

புதுடில்லி: கோவை ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு மூளை அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதையடுத்து டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு மூளையில் லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வலியுறுத்தப்பட்டதால் கடந்த 17-ம் தேதி மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது சத்குரு உடல் நிலை முன்னேற்றம் ஏற்பட்டு, சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன..
இதற்கிடையே அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
முன்னதாக மருத்துவர்கள் கூறுகையில் 'சத்குரு எங்களால் ஏற்படுத்தப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளைத் தாண்டி தன்னைத்தானே அவர் குணப்படுத்திக் கொள்கிறார்' .என்று கூறினர்
மேலும் சூழ்நிலைகள் கடுமையாக இருந்தபோதிலும், மிகவும் சவாலான சூழ்நிலைகளைக் கூட எவ்வாறு அழகாகச் சமாளிக்க முடியும் என்பதை சத்குரு நிரூபித்துக் காட்டுகிறார்.
என்றனர்.
சத்குரு விரைவில் பூரண குணமடைய வாழ்த்துவதாக பிரதமர் மோடி, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
சத்குருவிடம் நலம் விசாரித்த மோடி!
மூளை அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் தேறிவரும் ஈஷா யோகா நிறுவனர் சத்குருவிடம் பிரதமர் மோடி போனில் பேசி நலம் விசாரித்தார். விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

