ராஜஸ்தானில் ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ. 1000 கோடி ஊழல்: சிக்குகிறார் மாஜி அமைச்சர்
ராஜஸ்தானில் ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ. 1000 கோடி ஊழல்: சிக்குகிறார் மாஜி அமைச்சர்
ADDED : நவ 05, 2024 07:35 PM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஜல்ஜீவன் திட்டத்தை அமல்படுத்தியதில் ரூ. 1000 கோடி ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரில் முன்னாள் காங்., அமைச்சர் மகேஷ் ஜோஷி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராஜஸ்தானில் முந்தை காங்., முதல்வராக அசோக் கெலாட் ஆட்சியின் போது வீடு தோறும் குழாய் இணைப்புகள் வாயிலாக பாதுகாப்பான குடிநீரை வழங்கும் வகையில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்க டெண்டர்கள் பெறவும், அரசு ஊழியர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் லஞ்சம் கொடுத்தது, என இத்திட்டத்தை அமல்படுத்தியதில் ரூ. 1000 கோடி வரை முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ., புகார் தெரிவித்திருந்தது. கடந்தாண்டு சிலர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது.
இது தொடர்பாக இன்று முன்னாள் அமைச்சர் மகேஷ் ஜோஷி உள்ளிட்ட 22 பேர் மீது ராஜஸ்தான் மாநில லஞ்ச ஒழிப்புத்துறைத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது.
முன்னதாக அமலாக்கத்துறை பணமோசடி வழக்கும் பதிவு செய்துள்ளதால், தேவைப்பட்டால் மகேஷ் ஜோஷி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.