டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
ADDED : அக் 06, 2025 07:08 AM

கவர்தா:சத்தீஸ்கரில் டிரக் மீது ஜீப் மோதிய விபத்தில் சிறுமி உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 9 பேர் கொண்ட குழுவாக மத்திய பிரதேசத்தில் உள்ள கன்ஹா தேசிய பூங்காவை சுற்றிப் பார்த்து விட்டு, மீண்டும் கோல்கட்டா திரும்ப முடிவு செய்தனர். இதற்காக, பிலாஸ்பூர் ரயில்நிலையத்திற்கு பொலிரோ ஜீப்பில் டிரைவர் உள்பட 10 பேர் சென்று கொண்டிருந்தனர்.
நேற்று மாலை 4.30 மணியளவில் அகல்ஹாரியா கிராமத்தின் அருகே பொலிரோ ஜீப் சென்று கொண்டிருந்த போது, டிரக் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், சிறுமி மற்றும் 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் கவர்தாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.