ஜம்மு காஷ்மீரில் சுற்றி வளைக்கப்பட்ட ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாதிகள்; பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை
ஜம்மு காஷ்மீரில் சுற்றி வளைக்கப்பட்ட ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாதிகள்; பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை
ADDED : ஜன 18, 2026 02:07 PM

கிஷ்துவார்; ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ஜம்முகாஷ்மீரில் கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள சோனார் என்ற மலை கிராமத்தில் ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த குறிப்பிட்ட பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
இதை அறிந்து கொண்ட பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டுக் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட, இருதரப்பினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
துப்பாக்கிச் சண்டை நீடித்துக் கொண்டு இருந்த அதே வேளையில் அந்த குறிப்பிட்ட பகுதியை பாதுகாப்புப் படையின் மற்றொரு குழுவினர் சுற்றி வளைத்தனர். முழு பகுதியும் தற்போது சுற்றி வளைக்கப்பட்டு பயங்கரவாதிகளை பிடிக்க நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டு உள்ளது.
அங்குள்ள நிலைமைகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது, பயங்கரவாதிகள் குழுவின் அடையாளம் இன்னமும் தெரியவில்லை என்று பாதுகாப்புப் படையினர் கூறி உள்ளனர்.

