ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனி செயலர் வீட்டில் ஐ.டி. ரெய்டு
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனி செயலர் வீட்டில் ஐ.டி. ரெய்டு
ADDED : நவ 09, 2024 02:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனி செயலர் வீட்டில் ஐ.டி. ரெய்டு நடைபெற்றது.
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு நடக்கிறது. இங்கு மொத்தம் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 13, 20ல் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முயற்சிக்கிறது. அவர்களுக்கு எதிராக பா.ஜ., கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது.
இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரனின் தனி செயலாளர் சுனில் ஸ்ரீவஸ்தவா வீடு உள்பட 17 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.