தெலுங்கானா, புதுச்சேரியையும் கவனிப்பார் ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்
தெலுங்கானா, புதுச்சேரியையும் கவனிப்பார் ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்
UPDATED : மார் 19, 2024 10:50 AM
ADDED : மார் 19, 2024 10:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் பதவிகள், ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னராக இருந்த தமிழிசை நேற்று( மார்ச் 18) தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட திரவுபதி முர்மு, இந்த இரு மாநிலங்களின் கவர்னர் பொறுப்பை கூடுதலாக ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கி உத்தரவிட்டு உள்ளார்.

