ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ; முதல்நாளிலேயே வரலாற்றுச் சாதனை
ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ; முதல்நாளிலேயே வரலாற்றுச் சாதனை
UPDATED : அக் 21, 2026 02:48 PM
ADDED : அக் 21, 2026 01:42 PM

- நமது சிறப்பு நிருபர் -
ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் மெகா ஐபிஓ வெளியீடு இன்று (அக்டோபர் 21) முதல் நாளை மறுநாள் அக்டோபர் 23ம் தேதி வரை சந்தை விற்பனைக்காக அறிவிக்கப்பட்டு இருந்தது. முதல் நாளிலேயே இன்று முழுமையாக சந்தாதாரர்களால் வாங்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
விலை நிர்ணயம் பங்கு ஒன்றுக்கு ரூ.1,065 முதல் ரூ.1119 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஓ மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ₹30,213 கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இது இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ ஆகும். இன்று (அக்டோபர் 21) காலை 10:39 மணி நிலவரப்படி, 1.03 மடங்கு சந்தா பெறப்பட்டுள்ளது. அதாவது, விற்பனைக்கு விடப்பட்ட 19.75 கோடி பங்குகளுக்கு எதிராக, முதலீட்டாளர்கள் 20.25 கோடி பங்குகளுக்கு ஏலம் கோரியுள்ளனர்.
வழக்கமாகப் பெரிய நிறுவனங்களின் ஐபிஓக்கள் முதல் நாளில் மெதுவாகவே நிரம்பும். ஆனால் ஜியோ ஐபிஓ தொடங்கப்பட்ட முதல் 1 மணி நேரத்திலேயே 85% பங்குகள் வாங்கப்பட்டு, 100 நிமிடங்களுக்குள் முழுமையாகப் பங்குகள் விற்றுத் தீர்ந்தன. ஐபிஓ-விற்கு, முதல் நாளன்றே முதலீட்டாளர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
