துருக்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் சஸ்பெண்ட்: ஜேஎன்யு.,வை தொடர்ந்து ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலையும் அறிவிப்பு
துருக்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் சஸ்பெண்ட்: ஜேஎன்யு.,வை தொடர்ந்து ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலையும் அறிவிப்பு
ADDED : மே 15, 2025 10:17 PM

புதுடில்லி: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையை தொடர்ந்து, துருக்கியுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலையும் நிறுத்தி வைத்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலில் பிற நாடுகள் அமைதி காத்தன. ஆனால், துருக்கி மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. இது இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இதனால், அந்நாட்டிற்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் அதனை ரத்து செய் வருகின்றனர்.
இதனை தொடர்ந்து கல்வி நிறுவனங்களும் துருக்கிக்கு எதிராக திரும்பி உள்ளன. துருக்கி பல்கலை உடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ஜவஹர்லால் நேரு பல்கலை அறிவித்தது.
தற்போது டில்லியில் உள்ள ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலையும் துருக்கி உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
இது தொடர்பாக அப்பல்கலை பேராசிரியர் சைமா சயீத் கூறியதாவது: துருக்கி உடன் தொடர்புடைய அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைத்துள்ளோம். நாட்டு மக்கள் மற்றும் இந்திய அரசுக்கு ஆதரவாக நிற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.