ADDED : அக் 12, 2025 04:19 AM
பத்தனம்திட்டா: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் கருவறை வாயிலில் உள்ள இரு துவாரபாலகர்கள் சிலை களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள், செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு 2019ல் அனுப்பப்பட்டன.
திருப்பித் தரப்பட்ட கவசங்களில் 4 கிலோ தங்கம் மாயமானது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள பொருட்களை மதிப்பீடு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கே.டி.சங்கரன் தலைமையில் கேரள உயர் நீதிமன்றம் குழு அமைத்தது.
இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி சங்கரன், ஒரு பொற்கொல்லர் மற்றும் தேவசம் போர்டு அதிகாரிகள் குழுவினர் அய்யப் பன் கோவிலில் நேற்று ஆய்வை துவங்கியது.
துவா ரபாலகர்கள் சிலை, அவருக்கு அணிவிக்கப்பட்டுள்ள தங்க கவசம் உள்ளிட்டவற்றை சோதனை செய்த ஓய்வு பெற்ற நீதிபதி, அது தொடர்பான பட்டியலையும் தயாரித் தார்.