ADDED : நவ 19, 2024 02:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான, 'கொலீஜியம்' எனப்படும் நீதிபதிகள் தேர்வுக் குழுவின் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை, மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, ஜனாதிபதிக்கும், மத்திய அரசுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சித்தார்த் மிருதுல், வரும் 21ல் ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக, டி.கிருஷ்ணகுமார் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2016 ஏப்., 7ம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட டி.கிருஷ்ணகுமார், 2025 மே 21ல் ஓய்வு பெற உள்ளார்.
இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர்.