ADDED : மே 23, 2025 12:55 AM

மூணாறு: ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் யு டியூபர் ஜோதி மல்ஹோத்ரா. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில், ஹரியானா போலீசார் சமீபத்தில் இவரை கைது செய்தனர்.
இந்நிலையில் ஜோதி மல்ஹோத்ரா கேரளாவுக்கு பலமுறை வந்து சென்றதாக தெரியவந்தது.
இதுகுறித்து மாநில உளவுத்துறை போலீசார் விசாரித்தபோது, அவர் நான்கு முறை கேரளாவுக்கு வந்ததாகவும், மூணாறு உட்பட பல பகுதிகளில் 'ரீல்ஸ்' எடுத்து அவரது யு டியூப் சானலில் பதிவிட்டதாகவும் தெரியவந்தது.
அவர் எங்கெல்லாம் சென்றார், யாரை சந்தித்தார் என்பது குறித்து என்.ஐ.ஏ., உட்பட மத்திய ரகசிய பிரிவு போலீசார் சேகரித்தனர்.
இந்நிலையில் ஜோதி மல்ஹோத்ராவின் கேரள பயணம் குறித்து விசாரிப்பதற்கு, மத்திய சிறப்பு புலனாய்வு குழு வர உள்ளது.
அதற்கு முன்னதாக கேரள போலீசார் சேகரித்த தகவல்கள், மத்திய உளவுத் துறையினரிடம் வழங்கப்பட்டன.