மன்னிப்பு கேட்கும்படி கமலுக்கு உத்தரவிட முடியாது; சுப்ரீம் கோர்ட்
மன்னிப்பு கேட்கும்படி கமலுக்கு உத்தரவிட முடியாது; சுப்ரீம் கோர்ட்
UPDATED : ஜூன் 17, 2025 05:03 PM
ADDED : ஜூன் 17, 2025 12:58 PM

புதுடில்லி: ''கன்னட மொழி குறித்து பேசியதற்கு கமலை மன்னிப்பு கேட்க உத்தரவிட முடியாது,'' என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தக் லைப் திரைப்படத்திற்கு கர்நாடகாவில் விதித்த தடைக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜூன் 17) சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
* கர்நாகாவில் தக் லைப் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது.
* உரிய சான்றிதழ் பெற்ற பிறகு எந்த ஒரு படத்தையும் தடை செய்ய முடியாது.
* படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
* நடிகர் கமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது நீதிமன்றத்தின் வேலை அல்ல.
* கன்னட மொழி குறித்து பேசியதற்கு கமலை மன்னிப்பு கேட்க உத்தரவிட முடியாது.
* கமல் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது.
இந்த வழக்கில் வியாழக்கிழமைக்குள் கர்நாடக அரசு விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.