தேர்தல் பிரசாரத்திற்காக பட ரிலீசை தள்ளி வைத்தார் கங்கனா ரணாவத்
தேர்தல் பிரசாரத்திற்காக பட ரிலீசை தள்ளி வைத்தார் கங்கனா ரணாவத்
ADDED : மே 16, 2024 02:31 AM

மும்பை: லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக ‛‛எமர்ஜென்சி' திரைப்பட ரிலீசை தள்ளி வைத்தார் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்.
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், லோக்சபா தேர்தலில் இமாச்சல் பிரதேசம் மாண்டி லோக்சபா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரசாரம் செய்து வருகிறார்
இந்நிலையில் இவர் நடிப்பில் '' எமர்ஜென்சி' என்ற திரைப்படம் மறைந்த முன்னாள் காங்கிரஸ் பிரதமர் ‛‛இந்திரா'' பற்றிய திரைப்படம் ஆகும். இதில் ‛இந்திரா ' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்திரா தன் ஆட்சி காலத்தில் கொண்டுவந்த நெருக்கடிநிலை பற்றிய அரசியல் படம் என கூறப்படுகிறது.
கடந்த 14-ம் தேதி இப்படம் ரலீசாக இருந்தது திடீரென தள்ளி வைக்கப்பட்டது. தற்போது தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக கங்கனா ரணாவத் போட்டியிடுவதால் விரைவில் வெளியாகும் என தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு அறிக்கையாக தெரிவித்துள்ளார்.